
posted 13th November 2021
இந்திய மீனவர்கள் 23 பேரினையும் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை (12.11.2021) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 13ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று (12) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்க தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதாக றோலர் படகுகளின் நீளத்தினை மன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீரியல் வளத் துறையினருக்கு கட்டளை பிறப்பித்த நீதவான் வழக்கை திங்கட்கிழமை(15) வரை ஒத்திவைத்தார்.

எஸ் தில்லைநாதன்