
posted 1st November 2021
13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் ஏழு கட்சியின் தலைவர்கள் ஆராய்வதற்காக ஒன்று கூடுகின்றனர்.
அதாவது, 13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2 ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்கபட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முற்போக்கு கூட்டனியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ