
posted 1st November 2021

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (31.10.2021) இடம்பெற்றது.
இச்சந்திப்பில், புதிய ஆளுநர் அவர்களுக்கு அங்கஜன் இராமநாதன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.

எஸ் தில்லைநாதன்