
posted 22nd November 2021
“ஆயர்கள் நினைவேந்தல் தொடர்பாக சொன்ன கருத்துக்கள் தொடர்பில் இந்து மத வெறியர்களின் கருத்துகள் அருவருக்கத்தக்கது.
தமிழ் மக்களிடம் மத பேதங்கள் இருக்க கூடாது. ஆயர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க தேவையில்லை.”
இப்படி தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான 'ஸ்பொட்லைற்' நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஆயர்களின் கருத்தை சர்ச்சையாக்க தேவையில்லை. இந்து மதவாதத்தை வைத்து தமிழ்த் தேசியத்தை உடைப்பதற்கு சதித்திட்டம் உள்ளது.
தமிழ் அரசு கட்சி தலைவர் தொடர்பில் குழப்பம் உள்ளது. மாவை தமிழ் அரசுக் கட்சியை சரியாக வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
“அமெரிக்கா சென்ற கட்சியினரால் நல்லது நடந்தால் சிறப்பு. தமிழ்த் தேசிய உணர்வுள்ள தேர்தல் அரசியல் சாராதவர்கள் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட வேண்டும்”, என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன்