
posted 19th November 2021
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான தீம் பீடம் முற்றாக இடித்தளிக்கப்பட்டது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கடும் கண்டனம்.தெரிவித்துள்ளது.
துயிலுமில்ல நுளைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ளபோது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என தெரிவிக்கப்படுகpறது
பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் தீம் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து அழித்திருப்பதாக துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் .சிவகரன் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (18.11.2021) மாலை தகவல் கிடைத்ததும் தானும் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும் மன்னார் நகரசபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் சென்று பார்வையிட்டதாகவும்
.
எனவே இவ்வாறு தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பமடையலாம் தமிழ்மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எனவும் வி.எஸ் சிவகரன் தெரிவித்தார்
இச்சம்பவம் மாவீரர் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாஸ் கூஞ்ஞ