
posted 8th November 2021

இலங்கையிலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் தமது சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக தமது சம்பள உயர்வுக்கான, அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளில் அரசு உடனடியாகக் கைச்சாத்திட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், தற்பொழுது அரச வங்கி ஊழியர்கள் மாவட்ட ரீதியாக இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பாரிய அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இது தொடர்பாக பிரதேச அரச வங்கிகளுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்களில்,
“அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளில் உடனடியாக கைச்சாத்திடுக”
எனும் வாசகம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்