
posted 21st November 2021
இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ்மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டுள்ளது.
இரண்டாமிடத்தை மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தை புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.
முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதக் குழுவில் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன், லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.

