
posted 20th November 2021
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டைனமோட் வெடிபொருட்கள் மன்னாரில் ஒரு வீட்டிலிருந்து பொலிசாரால் மீட்பு. இது தொடர்பாக சந்தேகத்தின் நிமித்தம் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடற்படையினரின் இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ் கோஷ்டினரே பெருந் தொகை வெடி பொருட்களை கைப்பற்றியுளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (20.11.2021) பிற்பகல் மன்னார் சாந்திபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
கடற்படையினர் பொலிசாருக்கு வழங்கிய இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ஜெயதிலக தலைமையில் சென்ற மன்னார் பொலிசார் சாந்திபுரத்தில் ஒரு வீட்டை முற்றுகையிட்டு அதனை பரிசோதனை செய்தவேளையில் 998 கிலோ கிராம் எடையுள்ள வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இப்பகுதிக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவ் வெடி பொருள் மீன்பிடிக்காக டைனமோட் வெடிக்காக பாவிக்கப்படும் வெடி பொருள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவ் வீட்டிலுள்ள ஒருவர் (வயது 55) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக பொலிசார் தீவிர விசானையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ