
posted 3rd November 2021
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. திருவிழா நேரத்தில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையினரின் அறுவுறுத்தலின்படி பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயம் தனது உத்தியோகபூர்வ யூ-ரியூப்பான https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured என்ற அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
கந்தசஷ்டி திருவிழா காலத்தில் உற்சவ நேரங்களின்போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின்படி பக்தர்கள் ஆலயத்துக்கு வருவதைத் தவிர்த்து வீடுகளில் இருந்து தூர தரிசனம் செய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்