posted 25th November 2021
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் அடுத்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சபைத்தலைவரின் மேலதிக ஒரு வாக்கினால்நிறைவேறியது.
சபையின் விசேஷ கூட்டம் நேற்று 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானபோது சபைத் தலைவர் யோசப் இருதயராஜ் வரவு
செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரியதை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
வாக்கெடுப்பின்போதுஆளும்கட்சியான தமிழரசுக்கட்சிஉறுப்பினர்கள் 5 பேரும் தமிழர்விடுதலைக் கூட்டணி சுயேச்சைக்குழு ஆகியவற்றின்தலா ஒரு உறுப்பினருமான 7பேரும் ஆதரவாகவும் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி யைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் ஈ பி டி பி யைச் சேர்ந்த ஒரு உறுப்பினருமாக 7 பேர் எதிராக வாக்களித்தனர்.
மொத்தமாகவுள்ள 15உறுப்பினர்களில் ஈ பி டி பியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் சமூகமளிக்காததால் வாக்கெடுப்பில் சமநிலை ஏற்பட்டது.
இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க இச்சூழ்நிலையில் சபைத்தலைவருக்கு உள்ள தற்துணிவு அதிகாரத்துக்கு அமைய அவர்
மேலதிக ஒருவாக்கு ஒன்றை அளித்தமையால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

எஸ் தில்லைநாதன்