
posted 21st November 2021
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுற்றுச்சூழல் அணியால் “எமது நிலம். எமது மரங்கள்" எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் பனம் விதைகளை நடுகை செய்யும் திட்டம் 21.11.2021 ஆரம்பமானது.
வடக்கு - கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த விதை நடுகை வேலணையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்காக மூன்று பிள்ளைகளை அர்ப்பணித்த தந்தை முதல் விதையை நாட்டிவைத்தாரரென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்