ஹன்ரர் வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் காருடன் மோதியதில். இருவர் படுகாயம்

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஹன்ரர் வாகனம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டி மற்றும் காருடன் மோதியதில். இதில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேரக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று நண்பகல் 12 மணிளயவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ஹன்ரர் வாகனமே இந்த விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தால், மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த 15ஆம் திகதி விபத்து இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹன்ரர் வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் காருடன் மோதியதில். இருவர் படுகாயம்

எஸ் தில்லைநாதன்