
posted 12th November 2021
யாழ்ப்பாணம் – வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ளநீரைக் கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை வியாழக்கிழமை (11.11.2021) முன்னெடுக்கப்பட்டது.
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று மதியம் வசந்தபுரம் கிராமத்தில் தேங்கி இருந்த வெள்ளநீரைக் கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த பகுதியில் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்