
posted 1st November 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று நேரில் பார்வையிட்டார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடனான காலநிலை நீடிக்கிறது. இந்த நிலையிலேயே பலபகுதிகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லுண்டாய், நாவாந்துறை, அச்சுவேலி போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டார்.
அத்துடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அப்பகுதி மக்களுடனும் மற்றும் அதிகாரிகளுடனும் பேசி ஆராய்ந்தார்.

எஸ் தில்லைநாதன்