
posted 9th November 2021

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ்
அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி வர்த்தமானியை வெளியிட்டமை மக்களின் இயல்பு வாழ்வில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தவுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்கனவே வருமானங்களை இழந்து, அரசாங்க நிவாரணங்கள் எதுவும் இன்றி மிகவும் வறுமையில் அன்றாட வாழ்வை போராட்டத்தின் மத்தியில் அல்லல்படும் மக்களுக்கு உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு கட்டுப்பாடின்றி உணவுப்பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்குமானால், இந்நிலைமை மக்களை பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்ல கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
இவ்வாறான அரசின் செயற்பாடு வியாபாரிகள் பணம் சம்பாதிக்கும் சந்தர்பத்தை கூட்டுவதுடன் அப்பாவியான மக்களைச் சுரண்டி அவர்களை வறுமைக் கோட்டின் கீழ் மேலும் மேலும் தள்ளுவதை தவிர்த்து சுபீட்சமான வாழ்வை மக்களுக்கு அரசு தந்துதவ வேண்டுமென்றால் அவர்கள் அமூல் படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் மீள் பரிசீலணை செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ