
posted 27th November 2021
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் 18 பேர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்தியா பயணமானார்கள்
பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் இரு படகுகளில் ஊடுருவிய 23 இந்திய மீனவர்களையும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத தண்டனையுடன் விடுவித்த பருத்திததுறை நீதிமன்றம் அவர்களது படகுகளை அரச உடமையாக்கியது.
இதன் அடிப்படையில் வெளிவந்த 23 இந்திய மீனவர்களும் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் மேற்கொண்ட சமயம மூவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 20 பேரையும் இன்று தமிழநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானச் சிட்டை எடுப்பதற்காக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது 18 பேர் மட்டும் இன்று நள்ளிரவு 11.50ற்கு புறப்பட்டு அதிகாலை விமானத்தில் சென்னை செல்கின்றனர்.
இவ்வாறு செல்வோர் இன்று சனிக்கிழமை காலை அவர்களது வீடுகளிற்கு சென்றடைவர் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் கொரோனாத் தொற்றிற்கு இலக்கான ஐவரும் குணமடைந்த பின்னர தாயகம் அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
விலாஸ் வேண்டுமா? Villas
B & B வேண்டுமா? B&B
கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House