
posted 17th November 2021
சூரிச் நகரில் உள்ள சிவன் கோயில் அன்பே சிவம் அமைப்பினரல் வரப்புயர மரநடுகை திட்டத்தின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திற்கு 500 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தென்னங்கன்றுகள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அடம்பன் மினுக்கன் பாப்பாமோட்டை போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஆரம்ப நிகழ்வாக புதன்கிழமை (17.11.2021) நடைபெற்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சி.டி. அரவிந்த ராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயனhளிகளுக்கான தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தhர்.
இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாட்டு உதவிகளை மன்னார் றோட்டரி கழக உறுப்பினர்கள் செயற்படுத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

வாஸ் கூஞ்ஞ