
posted 17th November 2021
நாடு முழுவதும் 100 பாடசாலைகளின் விளையாட்டு மைதான அபிவிருத்தி நிகழ்வில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், 32 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நிகழ்வு பாடசாலை அதிபர் ம. மணிசேகரம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவசிறி, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பு செயலாளர் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


எஸ் தில்லைநாதன்