
posted 18th November 2021
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்று18 ஆம் திகதி வியாழக்கிழமை
திறந்து வைக்கப்பட்டது.
துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு நேற்று பலரின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்