முச்சக்கர வண்டியில் டிப்பர் மோதியதில் ஓட்டுனர் ஆபத்தான நிலை. சிறுத்தோப்பில் சம்பவம்.

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் சனிக்கிழமை (20.11.2021) மாலை தலைமன்னார் மன்னார் பிராதன வீதியில் பேசாலை பொலிஸ் நிலைய பிரிவில் சிறுப்தோப்பு பகுதியில் பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொலிசாரின் ஆரம்ப விசாரனையில் தெரியவருவதாவது சிறுத்தோப்பு எரிபொருள் நிலையத்தில் இரு பெண்கள் தாங்கள் பயணித்த ஸ்கூட்டி மோட்டபைசிக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்புகையில் மன்னாரிலிருந்து பேசாலை நோக்கி வந்த முச்சக்கர வண்டியில் இப் பெண்கள் பயணித்த மோட்டசைக்கிள் மோதும் அபாயம் ஏற்பட்டதும் அதிலிருந்து மீள்வதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர் முயன்றதாகவும்,
அந்நேரம் தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வந்த டிப்பர் வண்டியை மோதியதாகவும், இதனால் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்கு உள்ளாகியதாகவும் முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலைக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது விபத்துக்கு உள்ளாகிய சாரதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசாலை பொலிசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கர வண்டியில் டிப்பர் மோதியதில் ஓட்டுனர் ஆபத்தான நிலை. சிறுத்தோப்பில் சம்பவம்.

வாஸ் கூஞ்ஞ