மீன்பிடிப்பதற்கு எச்சரிக்கை!  தொடரும் அனுகூலமற்ற காலநிலை

மறு அறிவித்தல் வரை தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதே இதற்கு காரணம் என்று திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.

இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் பலமாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழகத்தின் வடக்கு கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவு பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அப்பகுதியில் உள்ள மீனவ மக்களை உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.

மீன்பிடிப்பதற்கு எச்சரிக்கை!  தொடரும் அனுகூலமற்ற காலநிலை

எஸ் தில்லைநாதன்