
posted 24th November 2021
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைக் கடலில் ஆணின் சடலம் செவ்வாய்க்கிழமை (23.11.2021) காலை, சடல ம் ஒன்று மிதக்கின்றது எனப் பூநகரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர்.
சடலமாகக் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் - பாசையூரைச் சேர்ந்தவர் எனவும், அவர் அன்ரனிஷ் வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய டண்சன் கனிராஜ் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

எஸ் தில்லைநாதன்