மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் மரணம்

வவுனியா- நொச்சிமோட்டை, துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி, முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 5 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டிலிருந்து மரவள்ளிக் கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார்.

இதன்போது முதியவர், அவரது தோட்டக் காணியில் சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் (வயது 69) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் மரணம்

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House