மாவீரர் குடும்பங்களின் வீடுகளில் தகவல் திரட்டுகின்றது இராணுவம்

கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் அவர்கள் தொடர்பில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

நேற்றைய தினம் திருநகர் மற்றும் அதனை அணடிய பகுதிகளில் இராணுவத்தினர் மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று தகவல்களை திரட்டினர் என்று கூறப்படுகின்றது.

இராணுவத்தினரின் நடவடிக்கையால் தாம் அச்சமடைந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மாவீரர் குடும்பங்களின் வீடுகளில் தகவல் திரட்டுகின்றது இராணுவம்

எஸ் தில்லைநாதன்