
posted 23rd November 2021
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மதத்தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நடாத்தப்பட்ட மருத்துவ முகாமில் பலர் கலந்து கொண்டு பலன் அடைந்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நெறிப்படுத்தலில் மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சர்வமத தலைவர்களுக்கும் வழிபாட்டு தலங்களில் கடமையாற்றும் தொண்டர்களுக்குமான இலவச மருத்துவ முகாம் திங்கள் கிழமை (22.11.2021)) காலை 8 மணி தொடக்கம் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது
குறித்த மருத்துவ முகாமில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சர்வ மதத் தலைவர் மதத்தலைவர்களும் ஆலயங்களில் பணிபுரியும் தொண்டர்களும் மருத்துவ சேவையினை பெற்றுக் கொண்டார்கள்

வாஸ் கூஞ்ஞ