மாணவர்களுக்கு கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மெசிடொ நிறுவனம் ஏற்பாடு.

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளுக்கு கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வையும் மற்றும் சுகாதார பொருட்களும் வழங்குவதில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டக்கான நிறுவனத்தின் (மெசிடோ) இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ தலைமையில் மெசிடோ நிறுவனம் சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி சுகாதார பொருட்களும் சுகாதார விழிப்புணர்வு பதாகைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

கோவிட் 19 பெரும் தொற்று காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (08.11.2021) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகின்ற கோவிட் 19 தொற்றிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக குறித்த பாடசாலை மாணவர்களுக்கு மேற்படி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மாணவர்களுக்கு கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மெசிடொ நிறுவனம் ஏற்பாடு.

வாஸ் கூஞ்ஞ