
posted 1st November 2021
வவுனியா மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஏனைய மாணவர்களுக்கும் பி. சி. ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடசாலை கல்விச் செயல்பாடுகள் அண்மையில் ஆரம்பமாகின.
இந்த நிலையில் வவுனியா மகாகச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (01.11.2021) பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எஸ் தில்லைநாதன்