மன்னார் பாலத்திலிருந்து பாய்ந்த பெண் சடலமாக மீட்பு

மன்னார் நகர் புறத்தில் அமைந்துள்ள கோந்தப்பிட்டி கடற்கரையில் ஒரு பெண்ணின் சடலம் ஒதுங்கியுள்ளது. இனம் காட்டப்படாத நிலையில் இருக்கும் இவ் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்கள் இனம் காணுவதற்காக மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கும்படி மன்னார் மரண விசாரனை அதிகாரி குணக்குமார் பொலிசாருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

மரண விசாரனையில் இது தொடர்பாக தெரியவருவதாவது;

11.11.2021 அன்று பேசாலை பகுதியைச் சேர்ந்த பணங்கட்டுகொட்டு பகுதியில் திருமணம் செய்துள்ள ஒரு பேசாலை தபாலக அரச ஊழியர் தனக்கு நேரம் கிடைக்கும்போது மன்னார் பாலத்தடியில் பின்னேரங்களில் தூண்டிலில் மீன் பிடிப்பது வழமை எனவும்,
சம்பவம் அன்று பிற்பகல் ஆறு மணியளவில் இவர் பழைய பாலத்தடியிலிருந்து இவ்வாறான செயல்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது புதிய பாலத்திலிருந்து ஒரு பிள்ளை கடலுக்குள் குதித்ததை கண்டுள்ளார்

உடனே இவர் 119 க்கு தொடர்பு கொண்டு பொலிசாருக்கு இத் தகவலை வழங்கியுள்ளார். உடனே பொலிசார் மற்றும் கடற்படையினர் அவ்விடத்துக்கு வருகை தந்ததாகவும் ஆனால் அச் சமயம் இருள் சூழ்ந்த காணப்பட்டதால் கடலுக்குள் பாயிந்தவரை உடன் கண்டு பிடிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது.

பின் கடற்படையினர் இவரை கடலில் தேடியபோதும் இச் சடலம் 13.11.2021 அன்று கோந்தப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இச் சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக ஏற்கனவே முறைப்பாடு எடுக்கப்பட்டிருந்த கண்கண்ட சாட்சி வரவழைக்கப்பட்டிருந்த பொழுது இவர்தான் குதித்தவர் என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

இவர் அணிந்திருந்த உடுப்பை வைத்துக் கொண்டு அதாவது சிவப்பு பாய்சூட் கறுப்பு ஜீன்ஸ் இவற்றை வைத்து இவர்தான் அந்த நபர் என தெரிவித்துள்ளார்.

இறந்தவர் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் என பொலிசாரின் ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளபோதும் மரண விசாரனை நடைபெற்ற வரைக்கும் இறந்தவரை அடையாளம் காட்டுவதற்கு உறவினர்கள் எவரும் வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மரண விசாரனை அதிகாரி குணக்குமார் மரண விசாரனையை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன் உறவினர்களால் அடையாளம் காட்டப்படுவதற்காக சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கும்படியும் பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

தற்பொழுது மன்னார் பொலிசார் இது தொடர்பாக புலன் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பாலத்திலிருந்து பாய்ந்த பெண் சடலமாக மீட்பு

வாஸ் கூஞ்ஞ