
posted 19th November 2021
வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் மன்னர் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நெறிப்படுத்தலிலும், மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலிலும் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் சர்வ மதத் தலைவர்களுக்கும், வழிபாட்டு தலங்களில் கடமையாற்றும் தொண்டர்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தினங்களில் இந்த மருத்துவ முகாம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வமத தலைவர்கள் தமக்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு சென்று குறிப்பிட்ட தினத்தில் வைத்திய உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அதனடிப்படையில் மன்னார் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்டவர்கள் இந்த மாதம் 19 ம் திகதி காலை 8:00 தொடக்கம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலும்,
மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ளவர்கள் 22.11. 2021 காலை 8:00 மணி தொடக்கம் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அவர்கள் 23.11.2021 காலை 8 மணி தொடக்கம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும்,
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டவர்கள் 24.11.2021 காலை 8:00 மணி தொடக்கம் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும்,
மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டவர்கள் 25.11.2021 காலை எட்டு மணி தொடக்கம் மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் இவ் வைத்திய சேவையினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ