
posted 28th November 2021
மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார் பகுதியில் அதிகமான இடங்கள் பெரும் வெள்ளக்காடுகளாக தொடர்ந்து காட்சி அளிக்கிறது மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரவுகளில் மன்னார் நகர் பிரதேச பிரிவிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
மன்னார் பகுதியில் கடந்த 26ந் திகதி தொடக்கம் 28ந் திகதி வரை பெய்த கடும் மழையால் என்றும் இல்லாதவாறு பல இடங்கள் வெள்ளக் காடுகளாக காட்சி அளிக்கிறது
இதனால் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் 130 குடும்பங்களைச் சார்ந்த 473 நபர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
அதாவது பேசாலை மேற்கு, தலைமன்னார் ஸ்ரேசன், துள்ளுக்குடியிருப்பு மற்றும் சிறுத்தோப்பு ஆகிய கிராம பிரிவுகளிலுள்ள மக்களே இடம்பெயர்ந்து நான்கு இடை தங்கள் நிலையங்களில் இருந்து வருகின்றனர்
அத்துடன் இவ் காலப்பகுதியில் இதுவரை மன்னார் நகரப் பிரதேச பிரிவில் 3627 குடும்பங்களைச் சார்ந்த 12673 நபர்கள் இவ் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு அடைந்துள்ளனர் என மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
பல கிராமங்களிலிலும் வீடுகளில் பெருக்கெடுப்பால் பலர் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு நீரை வெளியேற்றும் செயல்பாடுகளில் இறங்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

வாஸ் கூஞ்ஞ
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Click the section you prefer, Home Page, Apartments, Resorts, Villas, B & B or Guest Houses
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House