மன்னாரில் புதன் கிழமை (10.11.2021) 32 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கை மூலம் தெரியவருகின்றது. புதன்கிழமை (10.11.2021) 32 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் புதன் கிழமை (10.11.2021) 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் கொவிட் நிலவரம் தொடர்பாக வெளியிடும் நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையிலேயே இத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது;

மன்னார் பொது வைத்தியசாலையில் 09 நபர்களுக்கும்

மன்னார் மற்றும் முசலி சுகாதார அதிகாரிகள் பிரிவுகளில் 05 நபர்களுக்கும்

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும்

பிரதேச வைத்தியசாலைகளான;

நானாட்டான் 03

தலைமன்னார் 03

அடம்பன் 02

பெரிய பண்டிவிரிச்சான் 02

பேசாலை 01

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01

இக் கொவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2585 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக பதிவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந் நவம்பர் மாதத்தில் 10ஆம்திகதி வரைக்கும் மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக 192 நபர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் நவம்பர் மாதத்தில் இதுவரைக்கும் 205 பி.சி.ஆர். பரிசோதனைகளும், 1242 ஆன்டிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதனின் 10.11.2021 அன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மன்னாரில் புதன் கிழமை (10.11.2021) 32 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ