மன்னாரில் திருவள்ளுவர் விழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து மன்னாரில் திருவள்ளுவர் விழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக பிராத்தனை மண்டபத்தில் 16.11.2021 அன்று செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கின்றது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜிவா சிவதாஸ் கலந்துகொள்ள இருக்கின்றார்.

இந் நிகழ்வின்போது மன்னார் மாவட்டத்துக்கான மாவட்ட கீதம் வெளியீடு மற்றும் சிறப்புரை, பட்டிமன்றம், கவியரங்கம், குறள் நடனம், குறள் தரும் சிந்தனை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.

அத்துடன் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(

மன்னாரில் திருவள்ளுவர் விழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

வாஸ் கூஞ்ஞ