
posted 1st November 2021
ஊடக அறிக்கை
மக்களின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னார் மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பளித்து தலைமைத்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
நேற்று முன்தினம் (30) மாலை மன்னாருக்கு விஜயம் செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு, அந்த பிரதேச மக்கள் இன, மத பேதமின்றி வரவேற்பளித்ததுடன் அவரது சுக நலன்களையும் விசாரித்தனர்.
மன்னாரில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு குழுமி அவருடன் உரையாடியதை காண முடிந்தது.
பெளத்த மத குருமாரும் இதில் பங்கேற்றமை சிறப்பானதாகும்.
தான் சிறையிலிருந்த போது, தனக்காக பிரார்த்தித்த அத்தனை மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்