
posted 2nd November 2021
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் இரண்டாம் திகதியை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஆத்துமாக்களை நினவுகூறும் நாளாக அனுசரித்து வருகின்றது.
இத்தினத்தை, கிறீஸ்த்தவர்கள் தங்களது உறவுகளின் கல்லறைகளை முற்கூட்டியே துப்பரவு செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி கொழுத்தி, குடும்பமாக முழங்காலில் இருந்து செபங்களைச் சொல்லி அந்த ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுக்கும்படி ஆண்டவரிம் மன்றாடி, பின்பு மாலை நடைபெறும் பூசைவழிபாட்டிலும் பங்குபற்றி, இறுதியாக குருவானவர் சேமக்காலை முழுவதுமாக ஆசிர்நீரினைத் தெளித்து கல்லறைகளை ஆசீர்வதித்து இவ்வாத்துமாக்களின் நாளை நிறைவுசெய்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் கார்த்திகை மாதம் காலநிலை கைகொடுக்கவில்லை என்றாலும், மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் சேமக்காலையில் மாலையில் பெரும் இடி முழக்கங்கள் மற்றும் பலத்த கொட்டும் மழையில் பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருப்பலி கொண்டாட்ட வழிபாட்டில் மக்கள் பங்குபற்றுவதை படங்களில் காணலாம்.

வாஸ் கூஞ்ஞ