
posted 14th November 2021
பருத்தித்துறை தும்பளை கடற்கரையோரத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்தினரால் 50 புங்கன் மரக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் பணி வன பாதுகாப்பு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
தும்பளை கடற்கரை பொழுது போக்குக்காக அதிகளவில் மக்கள் கூடும் இடமாக உள்ளது. இதனால், நிழலுக்காகவும் அழகுக்காகவும் இந்த மரங்கள் நாட்டப்பட்டன என்று வன பாதுகாப்பு திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்