பிரதேச சபையின்   2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

பருத்தித்துறை பிரதேச சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 வாக்குகளில் நிறைவேறியது.

சபையின் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (12.11.2021) காலை சபையின் தவிசாளர் அ. சா. அரியகுமார் தலைமையில் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பிற்கு விட்டபோது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 8 உபறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன தலா ஒரு உறுப்பினருமாக 16 உறுப்பினருமாக 16 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஈ.பி. டி .பி.யின்சார்பில் கலந்துகொண்ட ஒரேயோரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்தார்.

21 உறுப்பினர்களைக் கொண்ட இச் சபைபில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியமக்கள் முன்ணணி, தமிழர் விடுதலைக்கூட்டணி,
பொதுஜனபெரமுன, முழுமையான ஆதரவை வழங்கின.

எஞ்சிய ஈ.பி. டி. பி.யின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினரும், ஐ. தே. க. வின் ஒரேயொரு உறுப் பினரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பிரதேச சபையின்   2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் விசேட கூட்டம் நடைபெறுகிறது

பிரதேச சபையின்   2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

எஸ் தில்லைநாதன்