
posted 15th November 2021
மன்னார் பள்ளிமுனை கோந்தைப்பிட;டி துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 40 வருடங்களுக்கும் மேலான பழமையானதும் நீண்ட காலம் பராமரிப்பு மற்றும் பாவனையில் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நீர்த்தாங்கி ஒன்று தகர்த்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியோடு மன்னார் மாவட்ட செயலாளரின் பணிப்பில் மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர் நடவடிக்கையின் காரணமாக மன்னார் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினரால் திங்கள் கிழமை (15.11.2021) மதியம் 12 மணியளவில் வெடி வைத்து தகர்த்து கீழிறக்கப்பட்டது
இத் தகர்த்தல் சம்பவத்தின்போது பொதுமக்கள், அருகில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளுக்கும் எதுவித பாதிப்பும் இல்லாத தன்மையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள், மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரத்தினம் திலீபன், மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப், மன்னார் நகர சபை செயலாளர், இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினரும் பங்குபற்றியிருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ