
posted 3rd November 2021
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான பரீட்சைத் திகதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் மார்ச் 5ஆம் திகதி வரை உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.தர சாதாரண தர பரீட்சையானது மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்