நினைவேந்தலுக்கான தடை உத்தரவு கோரிநிராகரிக்கப்பட்டது

மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை உத்தரவு கோரி ஊர்காவற்துறைப் பொலிஸாரால் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் 23.11.2021 அன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 23.11.2021 அன்று முன்னிலையாகுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் செயலாளர் கருணாகரன் குணாளன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் அம்பலம் கனகையா, ஊர்காவற்துறை தொகுதி கிளையின் நிர்வாகக் கிளை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி), ரமேஷ் றமில்டன், ருத்ரன் (நெடுந்தீவு) ஆகியோருக்கு ஊர்காவற்துறைப் பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த உத்தரவுக்கிணங்க அத்தரப்பினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இவர்கள் சார்பாக மூத்த சட்டத்தரணி நல்லையா சிறீகாந்தா ஆஜராகி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வாதங்களை முன்வைத்திருந்தார். அவரோடு இணைந்து சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோஷன், சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி ஷாலினி ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

நினைவேந்தலுக்கான தடை உத்தரவு கோரிநிராகரிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்