
posted 8th November 2021
காலநிலை மாற்றத்தால் இடியுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவலநிலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில், தாழ்ந்த நிலங்களில் வதிவிடங்களைக் கொண்டவர்கள் வெள்ளநிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து, இடைத்தங்கள் முகாம் வசதிகள் அமையாத பட்சத்தில், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை தாங்கள் கொடுப்பதாகக் கவலை தெரிவித்தனர்.
மன்னார் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவி பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில் திங்கள் கிழமை (08.11.2021) வரை மழை வெள்ளம் காரணமாக 154 குடும்பங்களைச் சார்ந்த 500 பேருக்கு மேல் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப் பகுதியில் அதிகமான தாழ்ந்த பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளபோதும் தலைமன்னார் பியர் வடக்கு, கிழக்கு, மேற்கு, எமில்நகர், நானாட்டான் மோட்டக்கடை, கட்டைக்காடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கிழக்கு. மேற்கு பகுதிகளிலுள்ள தாழ்ந்த பகுதிகளில் வெள்ளநீரால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிய குளங்களுக்கும் பாதிப்புக்கள் எற்பட்டுள்ளதாகவும் கட்டக்காட்டிலுள்ள குளத்தின் துளசும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதால் பிரதேச சபையானது மழைநீர் கட்டுப்பட்டு நிற்கும் இடங்களை துப்பரவு செய்து நீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ