தேசிய ரீதியில் சுகாதார அமைச்சரகம் நடாத்திய தெரிவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

தொற்று அல்லாத நோய்களுக்கான சுகாதார அமைச்சரகம் நடாத்திய தெரிவில் மன்னார் மாவட்ட பொது வைத்திசாலை,

1வது இடம் - தேசிய ரீதியில் விபத்துகளுடன் தொடர்புள்ள இறப்புகளை கண்காணிப்பது

3வது இடம் - விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தொற்றா நோயாளர்களின் தொடர்பான கண்காணிப்பு

பெற்றுள்ளது.

கடந்த 29.10.2021 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தொற்று அல்லாத நோய்களுக்கான சுகாதார அமைச்சரகம் நடாத்திய விருது வழங்கும் விழாவிலேயே இவ் விருதுகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சார்பாக இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்துபத்ராஜா பெற்றுக் கொண்டார்.

அதாவது தொற்று நோய்க்கு எவ்வளவு பேர் பாதிப்பு அடைகின்றனர், மற்றும் இவர்கள் மட்டில் கண்காணிப்பு எவ்வாறு இருக்கின்றது என்பதை தேசிய மட்டத்தில் தொற்று அல்லாத நோய்களுக்கான சுகாதார அமைச்சரகம் ஆராய்ந்து வருகின்றது.

இது தேசிய மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளிலேயே இவ் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையும் ஒன்றாகும். இந்த தெரிவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

அதாவது விபத்துகளுக்கு உள்ளாகி இறந்தவர்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வருகையில் சிறந்த முறையில் பராமரிப்பதில் மன்னார் பொது வைத்தியசாகைகே 2020 ஆம் ஆண்டுக்கான தெரிவில் முதலாவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு 2019 ஆம் ஆண்டுக்கான விருதையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையே பெற்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் காயப்பட்ட மற்றும் தொற்றா நோயாளர்களை இவ் வைத்தியசாலையில் சிறந்த பராமரிப்பில் ஈடுபட்டதில் தேசிய மட்டத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

தேசிய ரீதியில் சுகாதார அமைச்சரகம் நடாத்திய தெரிவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

வாஸ் கூஞ்ஞ