திரவசேதன உரம்

அம்பாறை மாவட்டத்தின் நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலைய பிரிவு விவசாயிகளுக்கு திரவ சேதன உரம் வழங்கும் நடவடிக்ககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜனாதிபதியின் சேதனப் பசளை (உரம்) பாவனைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலைய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக நிந்தவூரில் இலவச திரவ சேதன உரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில் இதுவரை 6600 ஏக்கர் நெற்காணிகள் நெல்விதைப்புக்கு தயார் நிலையிலுள்ளதாகவும், சுமார் ஆயிரம் ஏக்கர் வரை விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதகாவும் சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் தெரிவித்;தார்.

இதற்கமைய மூன்று கட்டங்களாக தலா ஒரு ஏக்கருக்கு ஒரு லீற்றர் வீதம் திரவ சேதன உரம் (எகோபயோபூட்) வழங்கப்படவும்,
4 – 6 வாரங்களில் தூவும் கே.சீ.எல். (பொட்டாசியம் குளோரைட்) உரம் ஒரு ஏக்கருக்கு 24 கிலோ வழங்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளதாகவம் அவர் மேலும் தெரிவித்தார்.

கமக்காரர் அiமைப்புக்கள் குறித்த சேதன உரவிநியோகத்தை பொறுப்பேற்று வழங்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.

திரவசேதன உரம்

ஏ.எல்.எம்.சலீம்