தனிப்பட்ட பகையால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தை

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்ப்பட்டார்.

கிளிநொச்சி - பரந்தன் - சிவபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முத்தையா கேதீஸ்வரன் (வயது -27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

தற்காலிக கொட்டகை ஒன்றிலிருந்து அவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இறந்தவரின் முகத்தில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன என்று தெரிய வருகின்றது.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ் .சிவ பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டது.

தனிப்பட்ட பகைமையை இந்தக் கொலைக்கு காரணம் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட பகையால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தை

எஸ் தில்லைநாதன்