
posted 22nd November 2021
வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் டிராக்டரில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள காணியை டிராக்டர் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது வாடகைக்கு அமர்தப்பட்ட குறித்த டிராக்டரின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும்அவரது உறவினரது மகனையும் டிராக்டரில் ஏற்றியபடி நிலத்தைப் பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது இரு சிறுவர்களில் ஒருவர் திடீர் என கீழே தவறிவீழ்ந்து டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதிலும் சிறுவன் முன்னரேயே உயிரிழந்தார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்