
posted 5th November 2021
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாண ம் கோயில் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பின் பின் கருத்துத் தெரிவித்த செந்தில் தொண்டமான்,
"விக்னேஸ்வரன் எம்.பி. எமது குடும்பத்துடன் நெருக்கமாக உறவு உள்ள ஒருவர். அவரை நீண்டகாலமாக எனக்குத் தெரியும் அதன் அடிப்படையில் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பாகவே இன்று அவரைச் சந்தித்துள்ளேன்.
அரசியல் ரீதியாக எந்த விடயமும் நாம் பேசிக் கொள்ளவில்லை. ஒரு சிநேகபூர்வமாகத்தான் நான் அவருடன் கலந்துரையாடினேன்", என்றார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், "எமது நீண்டகால நண்பர் சிநேக பூர்வமான சந்திப்பை மேற்கொண்டார். ஆனால், நான் அரசுடன் மாறிவிட்டேன், அரசுடன் சேர்ந்து விட்டேன் என்று சிலர் நினைப்பார்கள். நாங்கள் அவ்வாறு ஒன்றும் பேசவில்லை. நாங்கள் சிநேகபூர்வமாக சில விடயங்களைப் பேசினோம்" - என்றார்.


எஸ் தில்லைநாதன்