
posted 1st November 2021
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்று இராணுவத்தினரினால் முற்றுகையிடப்பட்டதில் நான்கு வாள்களுடன் கைது செய்யப்பட்ட12 இளைஞர்களையும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை(30) மாலை வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினர் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர். இதன்போது நான்கு வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதுடன் அவ் வீட்டில் இருந்த 12 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலீசில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை பொலிசார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (31) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன்