
posted 18th November 2021
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 பேரும் நேற்றைய தினம் (நவ-16) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 பெண்களும் 13 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பொலிஸாருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்