
posted 25th November 2021
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,205 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 5,57,370 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,27,929 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று புதன்கிழமை மேலும் 518 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப் படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 559,378 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்