கோவிட் தொற்றும் அப்டேற், மன்னார் மாவட்டம் – 05.11.2021

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை (05.11.2021) 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழது இந்த மாதம் (நவம்பர்) கொரோனா தொற்றாளர்கள் 82 ஆக உயர்ந்துள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் நாளாந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

பணிப்பாளர் த.வினோதன் மன்னாரில் கொரோனா தொடர்பாக வெளியிடும் நாளாந்த அறிக்கையில்,

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரில்,

நானாட்டான் மாவட்ட வைத்திசாலையில் 07 பேரும்

மன்னார் பொது வைத்தியசாலையில் 05 பேரும்

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் 03 பேரும்

பேசாலை மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும்

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஒருவரும்

பெரிய பண்டிவிரிச்சான் ஒருவரும்

தலைமன்னார் மாவட்ட வைத்திசாலைகளில் ஒருவரும்

எருக்கலம்பிட்டி மாவட்ட வைத்திசாலைகளில் தலா ஒருவரும்

மொத்தம் 21 பேராகும்

ஆகவே நவம்பர் மாதம் ஆரம்பித்து ஐந்து நாட்களில் மன்னாரில் 82 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா ஆரம்பிக்கப்பட்டு இதுவரைக்கும் 2475 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் (நவம்பர்) மன்னார் மாவட்டத்தில் 111 பி.சீ.ஆர் பரிசோதனைகளும், 627 அன்ரிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.வினோதனின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றும் அப்டேற், மன்னார் மாவட்டம் – 05.11.2021

வாஸ் கூஞ்ஞ