
posted 3rd November 2021
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் நடைமுறைப்படுத்தப்படும் "கிராமத்திற்கு ஓர் வீடு" என்ற திட்டத்தின் கீழ் 01/11 இரண்டு வீட்டுத்திட்ட வீடுகளுக்கு கடந்த திங்கட்கிழமை
அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசுக்கு அமைவாக வெள்ளாம்போக்கட்டி - ஜே/323 மற்றும் சாவகச்சேரி வடக்கு - ஜே/303 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கான வீடுகளுக்கே இவ்வாறு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அடிக்கல்லினை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜனின் தென்மராட்சி இணைப்பாளர்கள் நாட்டி வைத்திருந்தனர்.

எஸ் தில்லைநாதன்